VIMANARCHANA KALPAM
विमा नार्चन कल्पः
விமானார்ச்சன கல்பம்
வைணவ சமயத்தின் ஸ்ரீ வைகானஸ நெறி ஸ்ரீ விகனஸ முனிவரால் தோற்றுவிக்கப்பட்டதாகும். இவருக்கு ப்ருகு, அத்ரி,
காச்யபர், மரீசி என்னும் நான்கு சீடர்கள் இருந்தனர். அவர்களுள் ஒருவரான மரீசி என்பவரால் எழுதப்பட்டதே இந்த "விமானார்ரச்சன கல்பம் " என்னும் நூலாகும் .
இறைவழிபாட்டின் பலன், வகைகள், ஊரில் கோயில்களை அமைக்கும் முறை , கிராமம் , நகரம் , ஆகியவற்றிற்கான வேற்றுமைகள் . கோயில் கட்டுவதற்கான கற்களைத் தேர்ந்தெடுக்கும் முறை , கோயில் கட்டும் முறை (விமானங்களின்) கோபுரங்களின் விதங்கள் மற்றும் அவற்றின் லட்சணம் போன்ற செய்திகள், அனைத்தும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன .
OUR PROJECTS AT MAHARASTRA
भूपरिक्षा विधिः , तत्कालश्च
आचारयॊर् यजमानेन भूमिं सम्यक् परिशयेत् | यथेष्ट मासे सुक्लपक्षे कृष्णपक्षे त्रिधाध्यके वा , कर्तुरनुकुलर्क्षेभूपरिक्षां कारयेत् |
பூ பரீக்ஷா விதி
ஆசார்யன் யஜமானனுடன் பூமியை நன்கு பரிக்ஷிக்க வேண்டும் . (உகந்த ) எதாவது ஒரு மாதத்தில் சுக்ல பக்ஷத்திலோ , க்ருஷ்ண பக்ஷத்திலோ முதல் மூன்று நாட்களிலோ , விஷ்ணுவுக்கு உகந்த தினத்திலோ , எஜமானனுக்கு அனுகூலமான தினத்தில் "பூ" பரீக்ஷையைச் செய்ய வேண்டும்.
भू परीक्षा पूर्वं मृत्सन्ग्रहः
பூ பரீக்ஷை செய்து ம்ருத் ஸங்கரஹணம் செய்தல்
சதுரமாகவோ, நீண்டதாகவோ , கிழக்கிலோ, வடக்கிலோ சமமானதாக பூமியை செய்து சப்தம் , ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம், ஆகியவை உள்ளனவா? என நன்கு பரீட்க்ஷிக்க வேண்டும். நல்ல ஸ்பர்சம் உள்ளவளும், வெளுப்பு, மஞ்சள், சிகப்பு , கருப்பு முதலிய வர்ணங்களுடன் கூடியவளும், இனிப்பு , புளிப்பு, கார்ப்பு, கரிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ருசியுடையவளும், நல்ல மணமுடையவளும் , பால் மரங்கள், துளசி, குசம், தர்பம், விசவாமித்ரம், விஷ்ணுக்ராந்தம், ரோஜா பூஷ்பம், தூர்வா ஆகிய வற்றற்றுடன் சேர்ந்திருப்பவளுமான பூமியை தியானித்து நல்ல முகூர்த்தத்தில் க்ரஹித்து (எடுத்து) க்கொண்டு , ஆசார்யன் கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ சென்று குறிப்பிட்டுள்ள இடத்தில் "ஜீவந்த" என தொடங்கும் மந்திரத்தைச் சொல்லி ஜலத்தை விடவேண்டும். மேதினியை (பூமாதேவியின்) உருவத்தை தொடவேண்டும். பிறகு "இதம் விஷ்ணு: " என்ற மந்திரத்தைச் சொல்லி ஸ்வீகரிக்கவேண்டும் .
त्याच्यभूमि कथन पूर्वं निमित्तदर्शन प्रकारः
மண் எடுத்துக்கொள்ளத்தகாத இடங்களும், சகுனம் பார்க்கும் முறையும்
நபும்ஸக மரங்களுள்ள இடம், எலி, மண்டையோடு, எலும்பு, கற்கள், பெருமணல், கரையான் புற்றுள்ள இடம் கிணறுள்ள இடம் சாம்பலுள்ள இடம் கரி உள்ள இடம், உமி நிறைந்த இடம், முடி நிறைந்ததும், தீயவர்கள் வசிக்கும் இடம் போன்ற மேற்சொன்ன இடங்கள் அனைத்திலிருந்தும் மண்ணானது ஸ்வீகரிக்கத் தகாதது. முன்பு சொல்லப்பட்ட உகந்த இடத்தில் கையளவு பள்ளம் தோண்டி அதில் அந்த மண்ணை இடவேண்டும். அதிகமானால் வ்ருத்தி, குறைந்தால் கெடுதல், சமமாக இருப்பின் சமம் என்பதாகக் கொள்ளவேண்டும்.आलयद्वारस्योत्तमत्वादिकम्
प्राग्द्वारमुत्तमोत्तमम् , पक्षिमद्वारमुत्तमम् , दक्षिणद्वारं मध्यमम् , उत्तरद्वारमधमम् |
ஆலயத்தின் வாயில்புறத்தின் சிறப்பு
கிழக்குமுகமாக வாயிலிருப்பது உத்தமோத்தமம் (மிகச்சிறந்தது) . மேற்குமுகமாக வாயிலிருப்பது உத்தமம் (சிறந்தது). தெற்குமுகமாக வாயிலிருப்பது அத்தமமாகும்.
तरुणालय देशनिरुपणम्
தருணாலயத்திற்கான இடத்தைக் குறிப்பிடுதல்
எங்கு கருவறையானது செய்யப்படுள்ளதோ, அதற்கு ஈசான பாகத்தில், எந்திர ஸூத்ரத்திற்கு வடக்கில் அல்லது வாயு பாகத்தில் (அதாவது வடமேற்கில்) மூன்று கையளவு (மூன்றடி) அல்லது ஒன்பது கையளவுஉள்ளதாக முதல் அல்லது இரண்டாவது ஆவரணத்திலோ தருணாலயம் எழுப்பவேண்டும்.
तरुणालय निर्मणविधिः
தருணாலய நிர்மாண விதி :
தருணாலயம் அமைக்கும் முறை
சுவற்றின் மூல அளவு இரண்டு, மூன்று, நான்கு , தால அளவை உடையதாகவோ, அதன் மிதமுள்ளது நாளீக்ரஹ விசால அளவோ அல்லது அதற்கு சமமோ, மூன்றில் ஒரு பங்கோ, பாதியளவோ இருக்குமாறு அமைத்து, அதன் முன் மண்டபமானது பழைய சன்னிதி வாயிற்படி அளவு எப்படியோ, அப்படியே தருணாலயத்தின் வாயிற்படியின் அளவும் இருக்குமாறு அமைத்து , மண்பூசிய சுவற்றிற்கு மேல் புல்வேய்ந்ததாகவோ, ஓடு வேய்ந்ததாகவோ செய்யவேண்டும் . இங்கு சொல்லப்படாதது அனைத்தும் இரண்டாவது தருணாலயத்திற்கு
बालबेर - द्त्रव्य बेराधिवासादि निरुपणानुपुर्वं
यागशालादि विधिः
பாலாலயத்திற்கான பேரங்களின் த்ரவியங்கள் அதிவாஸங்கள் மற்றும் யாகசாலை அமைப்பது ஆகியவைகளின் விதிமுறைகள்
கருவேல, பின்ன, செண்பக, மருத, பலா, மகிழ, அதிமதுர, அத்தி, வில்வ, வன்னி ஆகிய மரங்களில் ஏதேனும் ஒன்றை ஆகம விதிப்படி கொண்டு வந்து சுத்தம், செய்து, மரப்பட்டையை நீக்கி, அங்குல அளவால் ஏழு, ஓன்பது, பதினொன்று, பதிமூன்று அங்குல அளவுகளில் ஏதேனும் ஒரு அளவு கொண்டு பெருமாளை ஸ்ரீதேவி, பூமிதேவியுடனோ அல்லது தேவிகள் இல்லாமலோ, லக்ஷணமாக நின்றுகொண்டோ, அமர்த்திருக்குமாறோ செய்து, ஸ்தாபிப்பதற்கு முன் தினம் விதிப்படி
அங்குரார்பணம் செய்து, பாலாலயத்திற்கு எதிர்ப்புறமோ ( பாலாலயம் செய்து பெருமாளை எழுந்தருளச் செய்வதற்காக தயார் செய்யப்பட்டுள்ள கோயிலுக்கு எதிரிலோ ) தெற்கிலோ யாகசாலையை அமைத்து , தோரணங்களால் அலங்கரித்து அதன் நடுவில் சயன வேதிகை அஸ்தம்முள்ளதாக அமைத்து, அதற்கு இரண்டு ஹஸ்தாயதம் கிழக்கு திசையில் தள்ளி சபியாக்னி குண்டமும், அதற்கு கிழக்கிலோ, வடக்கிழக்கிலோ ஸ்நான வேதிகையையும் அமைக்கவேண்டும் . மேலும் பஞ்சாக்கினியும் அமைக்கவேண்டும் என்பது சிலரது அபிப்ராயம்
www.indiamart.com/srinidhi-temple-architects/
www.indiamart.com/srinidhi-temple-architects/
प्रशस्त कालनिरुपणम्
अत ऊर्ध्वं प्रथमशिलेष्टकादि विन्यासविधिं वश्ये ______
சிலைகளை அமைக்கும் முறையைக் கூறுகிறேன் ---------
மாதங்களில் சிறந்ததான பங்குனி, சித்திரை, வைகாசி, மார்கழி, ஆனி ஆகிய மாதங்கள் உத்தமம், ஆவணி, ஆடி, கார்த்திகை, புரட்டாசி ஆகிய மாதங்கள் மத்திமம். மற்ற மாதங்கள் அதமம் . சுக்லபக்ஷத்திலோ, க்ருஷ்ணபக்ஷத்திலோ மூன்று நாட்களுக்குப் பிறகுள்ள பாகத்தை விட்டுவிட்டோ ஸ்ரவணம் ( திருவோணம் ) , ரோகிணி, ஹஸ்தம், சுவாதி , புனர்வசு ,சதபிஷக் ( சதயம் ) அனுராதா (அனுஷம்) ஆகிய நட்சத்ரங்களில் எது எஜமானனுக்கு உகந்ததோ அந்த நட்சத்திரத்தில் குறையில்லாத ஸ்திர ராசியில் தொடங்க வேண்டும்.
शङ्कुस्थापनम् சங்குஸ்தாபனம்
மரமுலையை ஸ்தாபிக்கும் முறை
உழப்பட்ட பூமியின் சுற்றளவிற்குள் நான்கு திசைகளிலும் நான்கு கையளவு இடத்தை ஜலத்தைக் கொண்டு சமமாகச் செய்து, அதன் நடுவில் முளையை அடிக்கவேண்டும் . முளையானது நல்ல மரத்தாலோ , யாகத்திற்கு சொல்லப்பட்ட அத்திமரத்தாலோ இருக்கவேண்டும். மானாங்குலத்தால் எட்டு அங்குலமோ , பன்னிரெண்டு அங்குல அளவோ உடையதாக நல்லதைச் செய்யக்கூடிய உருண்டையாகக் குடைபோன்று முளையைச்செய்து, சூரியோதயத்திற்கு முன்பு குறிப்பிட்ட இடத்தின் மத்தியில் முலையின் அளவிற்கு இரண்டு பங்கு அளவு வைத்துக் கொண்டு மண்ணை சமப்படுத்தி அதன் நடுவில் முளையை அடிக்கவேண்டும் .
திக் நிர்ணயம் செய்தல்
முற்பகலிலும் , பிற்பகலில் நிழல் விழுமிடத்தில் அந்த மண்டலத்திற்குள் இரண்டு அடையாளம் செய்து கொள்ள வேண்டும் . அவை இரண்டிற்கும் இடையே கயிறை கட்டவேண்டும் . அதனால் ஏற்படும் நிழலைக் கொண்டு நான்கு திசையையும் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். அந்த முளைக் குச்சிகள் மனிதனின் உடலுக்குச் சமமாகையால், தொன்னூற்றாறு பாகம் செய்து அவற்றில் ஒரு பாகம் அங்குலம், அந்த அங்குல அளவு நிழலுடைய பாகத்தை ஒவ்வொரு மாதமும் அளந்து கொள்ள வேண்டும் . சித்திரை , ஆனி , ஆவணி, ஐப்பசி ஆகிய மாதங்களில் சூரிய ஒளியானது இருந்தால் இரண்டு அங்குலம் ( தள்ளியும்) விட்டும் ஆடி, கார்த்திகை, பங்குனி ஆகிய மாதங்களில் நான்கு அங்குலமும், மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் ஆறு அங்குலமும், தை மாதத்தில் எட்டு அங்குலமும் விடவேண்டும் . வைகாசி மற்றும் புரட்டாசி மாதங்களில் நிழலானது இருக்காது ஒவ்வொரு மாதத்திலும் சொல்லப்பட்ட அங்குலத்தை முப்பது பாகமாகச் செய்து . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாகமாக யுக்தியுடன் சேர்த்து கணக்கிட வேண்டும். அந்த இடத்தில் மறுபடியும் மத்ய பாகத்தை இரண்டாகச் செய்து , அவ்விரண்டு பாகத்தையும் கிழக்கு மேற்காகச் சுற்றித் தெற்கு வடக்காக அந்த இரண்டு மத்ய பாகத்தை (அங்குள்ள மண்ணை) மீன் போன்ற உருவமாகச் செய்து அதில் கயிறை வாய் வழியாக நுழைத்து வால் பகுதியில் வெளியே எடுத்து கட்ட வேண்டும் .
பாறைப்பகுதி, நீரூற்று தோன்றும் வரை பூமியை பரிசோதித்து, கல்லை ஸ்தாபிக்கும் முறை
அதற்கு மேற்கில் "மேதினீ " எனதொடங்கும் மந்திரத்தைச் சொல்லி நீர் ஊற்று தோன்றுமளவோ, பாறைப்பகுதி வரையிலோ தோண்டி, அதில் ஏற்படும் சிறு கற்களை அகற்றி, மணல் கொட்டி நிரப்பி திமிசு கொண்டு நன்கு கெட்டியாக ஆகுமாறு செய்து, ஏழு நாட்கள் கழித்து தோண்டப்பட்ட அந்த பகுதியை ஐந்து பாகமாகப் பகுத்துக்கொண்டு மூன்று பாகம் மீதமிருந்தால் அது உத்தமம் , இரண்டு பாகமாகில் மத்யமம் . ஒரு பங்கு மீதமிருந்தால் அதமம் . இவ்வாறு த்ருடமாக செய்யப்பட்ட அந்த இடத்தில் கருங்கல்லையோ , செங்கல்லையோ வைக்கவேண்டும் .
शिलेष्टकादि लक्षणम्
கற்கள், செங்கற்கள் முதலியவைகளின் லக்ஷணம்
கற்கள், செங்கற்கள் முதலியவைகளின் லக்ஷணம்
அவைகளின் லக்ஷணமானது -- விமானங்களுடைய அளவிற்கு ஒற்றைப்படையிலோ, இரட்டைப்படை அளவுடையதாகவோ ஒவ்வொன்றிற்கும் மூன்று அல்லது அங்குலமோ அதிகப்படுத்த வேண்டும். அங்குலத்தின் எண்ணிக்கை சம அளவை உடையதாகவோ. அதில் பாதி அளவுடையதாகவோ, பாதியினும் பாதியோ அல்லது மூன்று அங்குலம் முதல் பதினோரு அங்குலம் வரை ஒவ்வொரு அங்குலமாக அதிகரித்து விஸ்தாரமானது புதிதாக இருக்க வேண்டும் . அதில் பாதி பரப்பளவும், இருமடங்கு உயரமும், இவ்வாறு நான்கு கற்சிலைகளையோ , ஸ்வதா பிம்பம்களையோ த்ருடமான கால்கள், நல்ல முகம், பிருஷ்ட பாகங்களுடன் கூடியதாக அமைத்து, கொண்டு வர வேண்டும் .
शान्तिकादि विमानलक्षणम्
शान्तिकादि विमानलक्षणम्
विमान विपुलस्य सप्तदशोत्सेधं शान्तिकं, अर्धाधिकोत्सेधं पौष्टिकं, पादोनद्विगुणं जयदं, अद्भुतं पादाधिकं, द्विगुणं सार्वकामिकं स्यात् |
சாந்திக விமானத்தின் லக்ஷணம்
சாந்திக விமானத்தின் லக்ஷணம்
விமானத்தினுடைய அளவானது கீழ் பாகத்திலிருந்து மேல் நோக்கி 17 அடி உயரம் உடையதாயின் அது சாந்திகம் எனப்படும். இந்த வகை விமானமானது சொல்லப்பட்டுள்ள அளவில் பாதிக்கும் மேலான அளவை உடையதாயின் பௌஷ்டிகம் என்றும், கால் பாகம் குறைய இரு பங்கு உடையதாயின் ஜயதம் , கால் பங்கு அதிகமாயின் அத்புதம் என்றும் , இரு மடங்கு உடையதாயின் ஸார்வகாமிகம் என்றும் கொள்ள வேண்டும் .
हर्म्यभेदः तत्स्वरूपञ्च
हर्म्यभेदः तत्स्वरूपञ्च
விமானங்களின் வகைகளும், அதன் ஸ்வரூபமும்
நாகரம், திராவிடம், வேஸரம் என்பதாக விமானங்கள் மூன்று வகைப்படும். விமானங்கள் குரம் முதல் ஸ்தூபிவரையிலும், நான்கு பக்கமும் ஒரே அளவுள்ள சதுரமானதாக உள்ளதற்கு நாகரம் என்று பெயர். அவ்வாறே உருண்டை வடிவத்தினுடைய விமானத்திற்கு வேஸரம் என்று பெயர் . மேலும் பிரஸ்தரம் வரையிலும் ஸமசதுரமாயும் , அதற்குமேல் உருண்டை வடிவான க்ரீவமும் , சிகரமுமுடைய விமானமாயினும் அதற்கும் வேஸரம் என்று பெயர். முன்சொன்னவாறே அனைத்து பாகங்களும் அமைக்கப்பட்டு ஸ்வச்ர க்ரீவத்தையும் சிகரத்தையுமுடைய விமானத்திற்கு திராவிடம் என்று பெயர்.
சாந்திகம் விமானத்தின் அளவானது கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு புறங்களிலும் சமமான அளவை உடையதாக (சதுரமாக) இருக்க வேண்டும். உருண்டை வடிவிலும் சமமான அளவுடன் இருக்க வேண்டும். அவை அர்ப்பிதம் , அனற்ப்பிதம் என்பதாக இரு வகைப்படும். அலிந்திரமில்லாதது அர்ப்பித்தம், அலிந்திரத்துடன் கூடியது அனர்ப்பிதம் என்றும் சொல்லப்படுகிறது.
சாந்திகம் விமானத்தின் அளவானது கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு புறங்களிலும் சமமான அளவை உடையதாக (சதுரமாக) இருக்க வேண்டும். உருண்டை வடிவிலும் சமமான அளவுடன் இருக்க வேண்டும். அவை அர்ப்பிதம் , அனற்ப்பிதம் என்பதாக இரு வகைப்படும். அலிந்திரமில்லாதது அர்ப்பித்தம், அலிந்திரத்துடன் கூடியது அனர்ப்பிதம் என்றும் சொல்லப்படுகிறது.

Comments
Post a Comment